கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பிணத்தை காரில் ஏற்றும் போது பிடிபட்டனர்
விழுப்புரம்: கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். பிணத்தை காரில் ஏற்றத முயன்ற போது, ஊர் மக்களிடம் பிடிபட்டனர்.
மதுரையை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 42). இவரது மனைவி சத்யா (35). இவர்களுக்கு கவுதம் (15), கவுசல்யன் (10), தரணி (6) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர் 10 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்தில் குடியேறினார். இவர் அங்கு மருந்து கடை நடத்தி வந்தார். வியாபாரத்தை கவனிக்கும் பொருட்டு 2 மகன்களையும் மதுரையில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்தார். மகள் தரணியை மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்டார்.
இந்த நிலையில் இவர் மனைவி சத்யாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது. முனீஸ்வரன் கடைக்கு சென்ற பின் சத்யாவை பார்க்க அந்த வாலிபர்கள் அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றனர்.
இது பற்றி கேள்விப்பட்ட அவர் தன் மனைவியை கண்டித்தார். ஆனாலும் சத்யா தனது கள்ளத் தொடர்பினை விடவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்து வீட்டிற்கு வந்த முனீஸ்வரன் தன் மனைவி சில வாலிபர்களுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன் தனது மனைவியை திட்டினார். அப்போது அங்கிருந்த வாலிபர்களுடன் சேர்ந்து சத்யா, தனது கணவர் முனீஸ்வரனை தாக்கினார்.
இதில் முனீஸ்வரன் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த கொலையை ஊர் மக்களிடம் இருந்து மறைக்க அவர்கள் முனீஸ்வரன் பிணத்தை மதுரைக்கு கொண்டு சென்று அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி ஏமாற்றி விடலாம் என்று தீர்மானித்தனர்.
நேற்று அதிகாலை திட்டத்தின்படி முனீஸ்வரனின் பிணத்தை வெள்ளை துணியால் சுற்றி ஒரு காரில் ஏற்றினர். அப்போது சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் காரை சுற்றி வளைத்தனர்.
காரில் இருந்த 3 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர். காரில் முனீஸ்வரன் பிணத்தை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனீஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிடிபட்ட சத்யாவிடமும், வீட்டில் இருந்த மகள் தரணியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, "இரவில் வீட்டுக்கு 3 பேர் வந்ததாகவும் அவர்கள் தனது தாயுடன் சேர்ந்து தந்தையை தாக்கியதாகவும்'' தரணி கூறினாள்.
அவள் தெரிவித்த அங்க அடையாளங்களை வைத்து அந்த 3 பேர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications