இந்த ஆண்டின் நிதி பற்றாக்குறை ரூ.3.81 லட்சம் கோடி!
டெல்லி: இந்த ஆண்டில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ரூ.3.81 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2010-11ம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே) நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.01 லட்சம் கோடியாக உள்ளது.
முழு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.3.81 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் வருவாயைவிட செலவுகள் அதிகரிக்கும்போது நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் முதல் இரண்டு மாதங்களில், மத்திய அரசு மேற்கொண்ட மொத்த செலவினம், சென்ற நிதி ஆண்டின் இதே காலகட்டதோடு ஒப்பிடுகையில் 12.1 சதவீதம் அதிகரித்து ரூ.1.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அதேசமயம் வரி வருவாய், பங்குகள் விற்பனை மற்றும் இதர வருவாய் மூலம் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் 6.3 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.46,000 கோடியாக உள்ளது. இதில் வரி வசூல் மூலம் கிடைத்த நிதி ரூ.31,896 கோடியாகும். இது சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 5.5 சதவீதம் அதிகம்.
இந் நிலையில், 3ஜி அலைவரிசை ஒதுக்கீட்டு ஏலம் வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.67,720 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும், வயர்லெஸ் பிராண்ட் பாண்ட் அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாகவும் ரூ.38,540 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனால் இந்த ஆண்டு நிதி பற்றாக்குறையை வெற்றிகரமாக எதிர்கொண்டுவிட முடியும்.
மேலும் பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.40,000 கோடி வருவாய் திரட்டவும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸ் விலையை உயர்த்தியதன் மூலமும் மத்திய அரசின் மானியச் சுமை குறையும்.
இதனால் இந்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறை மேலும் குறையும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications