எகிப்து வக்கீலுக்கு இந்திய இதயம் பொருத்தம்-சென்னையில் ஆபரேஷன்
சென்னை: எகிப்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு சென்னை மருத்துவமனையில், இந்தியர் ஒருவரின் இருதயம் பொருத்தப்பட்டது.
இதுகுறித்து முகப்பேர் பிரான்டியர் லைப்லைன் கே.எம்.செரியன் இருதயக் கழக மருத்துவமனை டாக்டர்கள் சரவண கணேஷ், கணபதி, சைலேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடையே பேசுகையில்,
எகிப்து நாட்டை சேர்ந்த வக்கீல் முகமது இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தார். அவரது நிலைமை மோசமாக இருந்தது. இதை தொடர்ந்து அவருக்கு மாற்று இருதயம் வேண்டி, உறுப்பு மாற்றுப் பதிவில் அவரது பெயரை பதிவு செய்து இருந்தோம். மேலும் தமிழக இறந்தோர் உடல் உறுப்பு மாற்று கண்காணிப்பாளர் டாக்டர் ஜே.அமலோர்பவநாதனுக்கும் தகவல் அனுப்பியிருந்தோம்.
இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த 51-வயது நிறைந்த ஒருவரின் இருதயத்தை தானம் செய்ய இருப்பதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது பெயரை நாங்கள் தற்போது தெரிவிக்க இயலாது. அவருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
மாற்று இருதயத்திற்கு காத்திருப்போர் பட்டியலில் இந்த இருதயத்திற்கு ஏற்ற பயனாளிகளில் எந்த இந்தியரும் இல்லாததால் எகிப்து நாட்டை சேர்ந்த அவருக்கு மாற்று இருதயத்தை பொருத்த நாங்கள் முடிவு செய்தோம். இதை தொடர்ந்து கடந்த மாதம் 30-ந் தேதி மிக பத்திரமாக இருதயம் கொண்டு வரப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். இன்னும் 10 நாட்களில் அவர் பூரண குணம் அடைவார் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications