மறைந்த தலித் தலைவர் கக்கனின் தம்பி விஸ்வநாதன் அமெரிக்காவில் மரணம்
சென்னைச மறைந்த தலித் தலைவர் கக்கனின் தம்பி விஸ்வநாதன் அமெரிக்காவில் தனது மகள் வீட்டில் மரணமடைந்தார்.
காமராஜர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் கக்கன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கக்கன், எளிமைக்குப் பெயர் போனவர். கடைசி வரை அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்தவர். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பாடமாக திகழ்கிறது அவரது வாழ்க்கை.
கக்கனின் தம்பி விஸ்வநாதன் (67). இவருக்கு மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார். அவர் தற்போது கர்ப்பமாக உள்ளதால்,தனது மனைவியுடன் மகளைப் பார்ப்பதற்கு விஸ்வநாதன் சென்றிருந்தார்.
இந்த நிலையில்அவருக்கு அங்குமாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். வருகிற 13ம் தேதி விஸ்வநாதனுக்குப் பிறந்தநாளாகும். இந்தநிலையில் அவர்
மரணமைடந்துள்ளார்.
இதையடுத்து அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
விஸ்வநாதன் மறைவுக்கு இந்து இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் விநாயகர் வி.முரளி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,
பி.விஸ்வநாதன், இந்து இயக்கங்களின் கூட்டமைப்பிற்கும் ஒரு தூணாக திகழ்ந்தார். அரிஜன மக்கள் அந்நிய பிரசாரகர்களிடம் ஏமாந்து போய் மதம் மாறி விடாமல் தடுத்து அதே நேரத்தில் அவர்கள் வாழ்வில் முன்னேறி வாழவும் நற்பணி ஆற்றினார். அவரது மறைவினால் இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் உள்ளாகியுள்ளது. பாரதத்திற்கு சேவை செய்வதையே தன் வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருந்த ஒரு ஆத்மா மறைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.
சுப்ரமணியம் சுவாமி இரங்கல்
மறைந்த விஸ்வநாதன், சுப்பிரமணியம் சுவாமி தலைமையிலான ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து சுவாமி வெளியிட்டுள் அறிக்கையில், எங்களது கட்சியின் பொதுச் செயலாளர் விஸ்வநாதன் கக்கன் சென்னை திரும்புவதற்காக ஆவலுடன் காத்திருந்த நேரத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இது எதிர்பாராதது என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications