வருமான வரி ரெய்ட்: தனியார் பொறியில-மருத்துவ கல்லூரிகளில் ரூ.20 கோடி பறிமுதல்
சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் நேற்று நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.20 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தப் பணம் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட நன்கொடை என்று தெரிகிறது.
நன்கொடை வசூல், உரிய அனுமதி இல்லாமை, கூடுதல் கட்டணம், வரி ஏய்ப்பு ஆகிய புகார்களின் அடிப்படையில் தனியார் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சென்னை, ஆவடி, மதுரவாயல், மேற்கு தாம்பரம், கும்மிடிப்பூண்டி, மேல்மருவத்தூர், கோவை, கொடைக்கானல், ஆரணி உள்ளிட்ட இடங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இந்தச் சோதனைகள் நடந்தன.
அப்போது கணக்கில் வராத ரொக்கம் மற்றும் வங்கி வைப்புத் தொகையாக இருந்த வரி செலுத்தப்படாத பணம் என மொத்தம் ரூ. 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனையின்போது சென்னைக்கு அருகில் உள்ள ஒரு பிரபல குழுமத்தின் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலகங்களில் இருந்து மட்டும் ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல கோவையில் கல்வி நிறுவனத்தில் இருந்து ரூ. 10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற கல்லூரிகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்தும் வருமான வரித்துறை விரைவில் தகவல் வெளியிடும்.
இந்தச் சோதனைகள் இரவும நீடித்தன. இன்றும் தொடர்வதாகத் தெரிகிறது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications