பஸ் டிரைவருக்கு செருப்படி-மதுரையில் அரசு பஸ்டிரைவர்கள் ஸ்டிரைக்
மதுரை: மதுரையில் அரசு பஸ் டிரைவர் ஒருவரை திருமண கோஷ்டியினர் செருப்பால் அடித்ததால் பஸ் டிரைவர்கள் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். இதனால் மதுரையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மதுரை பெரியார் நிலையம் - ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வேன் டிரைவர் ஒருவர் திடீரென யு டர்ன் அடித்து வந்துள்ளார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சுடன் வேன் மோதப் பார்த்தது. இதைப் பார்த்த அரசு பஸ் டிரைவர் இறங்கி வந்து வேன் டிரைவருடன் சண்டை போட்டுள்ளார்.
இதனால் வேனில் இருந்த திருமண கோஷ்டியினர் ஆத்திரமடைந்து பஸ் டிரைவரை செருப்பால் அடித்துள்ளனர். இந்த சம்பவத்தால் கோபமடைந்த பஸ் டிரைவர் மற்ற டிரைவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த வழியில் வந்த அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டது.
டிரைவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் மதுரையின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பி்த்தது. போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தியப் பிறகு டிரைவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications