தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீர் நீக்கம்!
மதுரை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டு வந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. அந்தப் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி, பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏவுக்கு அக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் பதவி வழங்கினார் கட்சியின் தலைவரான உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.
இந் நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பகுஜன் சமாஜ் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சுரேஷ் மானே கூறியதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டு வந்த செல்வப்பெருந்தகை கடந்த சில காலமாக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இது குறித்து அவருக்கு கட்சி மேலிடம் பல முறை எச்சரிக்கை விடுத்து வந்தது.
ஆனால், அவர் அதைப் பற்றி கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் கட்சி விரோத நவடிக்கைகளில் செயல்பட்டு வந்தார். எனவே அவரை தமிழக தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தமிழக தலைவராக ஆம்ஸ்ட்ராங் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications