மதுபாட்டிலில் அலுமினிய தகடு: விவசாயிக்கு 25 ஆயிரம் நஷ்ட ஈடு
நெல்லை: மதுபாட்டிலில் அலுமினிய தகடோடு விற்பனை செய்த மாவட்ட டாஸ்மக் நிர்வாகம், விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
ஆலங்குளம் தாலுகா அருணாச்சலபுரத்தில் உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிதுரை, விவசாயி, இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அழகியபாண்டியபுரத்தில் உள்ள டாஸ்மக் கடையில் 268 ரூபாய் கொடுத்து, 4 குவாட்டர் பாட்டில்கள் வாங்கினார்.
மதுபானத்தை வீட்டிற்கு கொண்டு் சென்ற இசக்கிதுரை மூடியை திறந்த போது பாட்டினுள் அலுமினிய தகடு ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதி்ர்ச்சி அடைந்த அவர் அதை குடிக்கவில்லை. மற்ற பாட்டில்களும் மோசமாக இருக்கும் என நினைத்து அவற்றையும் பயன்படுத்தவில்லை.
மதுவை குடிக்க நினைத்து வாங்கிய தனக்கு ஏமாற்றமும், மன உளைச்சலும் ஏற்பட்டதாக கூறினார் இசக்கிதுரை, நெல்லை டாஸ்மக் மேலாளர், சென்னை டாஸ்மக் நிர்வாக இயக்குனர் மற்றும் மதுபான உரிமையாளர் மீது நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராமசந்திரன், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஜெசிந்தா ஆகியோர் விவசாயி இசக்கிதுரைக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications