காதலியைச் சந்தித்த வக்கீலுக்கு அடி, உதை-மனமுடைந்து தற்கொலை
நான்குநேரி: நான்குநேரி அருகே வக்கீலை ஓரு கும்பல் தாக்கியதால் மனமுடைந்த அவர்
தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்தனர்.
நான்குநேரி நம்பி நகரை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் கண்ணன். இவர்
நான்குநேரியில் வக்கீலாக உள்ளார். நான்குநேரி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும்
தற்காலிக பெண் ஊழியர் ஒருவரை காதலித்தார். இவர் ஏர்வாடியை சேர்ந்தவர். இவர்கள்
இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை ஏர்வாடியில் உள்ள காதலியை சந்திப்பதற்காக கண்ணன் அவரது
வீ்ட்டிற்கு சென்றார். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் கண்ணன் வீட்டிற்குள்
சென்றதும் கதவை வெளிப்புறமாக பூட்டினர்.
இதனால் செயவதறியாது திகைத்த கண்ணன் வீட்டின் பின்புறம் வழியாக தப்பிக்க
முயன்றார். அப்போது அங்கு நின்றவர்கள் கண்ணனை அடித்து உதைத்தனர். இதனால் அவர்
தான் கொண்டு வந்த பைக்கை போட்டு விட்டு தப்பியோடினார்.
வீட்டிற்கு வந்த கண்ணன் அவமானம் தாங்காமல் பூச்சி மருந்து குடித்து தற்கொலை
செய்து கொண்டார். இதுகுறித்து கண்ணனின் தந்தை முத்தையா ஏர்வாடி போலீசில்
புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விசாரணை நடத்தி வக்கீலை தாக்கிய ஏர்வாடியை சேர்ந்த
மனித நேய மக்கள் கட்சி தலைவர் அஜ்மத்கான், பக்ரூதின் அலி அகமது, ஷேக் முகமது,
முகைதீன் அப்துல் காதர், காதர் மூகைதீன், உள்பட 10 பேரை கைது செய்தனர்.
இவர்கள் மீது வக்கீலை தாக்கியதாகவும், தற்கொலைக்கு காரணமாக இருந்ததாகவும்
வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications