'கோஷ்டிக் கலவரம்' எதிரொலி-ப.சிதம்பரம் பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு
சென்னை: கோஷ்டிக்கலவரம் காரணமாக,மத்தியஉள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் என கள்ளக்குறிச்சி காங்கிரஸார் அறிவித்ததால், அந்தப் பொதுக் கூட்டத்தையே காங்கிரஸ் கட்சி தள்ளி வைத்து விட்டது.
காங்கிரஸ் கோஷ்டிக் கலவரம் மகா கேவலமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. குழாயடிச் சண்டை போல ஊருக்கு ஊர், நகருக்கு நகர்,கிராமத்துக்குக் கிராமம் கோஷ்டிச் சண்டை முற்றி வருகிறது.
அப்பழுக்கற்ற தலைவர் கக்கன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதிலும் கோஷ்டிப் பூசல் புகுந்து அசிங்கமாக்கி வருகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இக்கூட்டத்திற்கு சிதம்பரம் வரக் கூடாது என்று கோரி வாசன் கோஷ்டியினர் பிரச்சினை கிளப்பி வருகின்றனர். இதை ஒரு தீர்மானமாகவே நிறைவேற்றியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்தக் கூட்டத்தையே தள்ளி வைத்து விட்டது காங்கிரஸ் கட்சி.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஜுலை 18-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க இயலாத காரணத்தினால் விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.சிவராஜ் எம்.எல்.ஏ.வின் வேண்டுகோளை ஏற்று பொதுக்கூட்டம் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்படுகிறது.
மேற்படி, மாற்றி அறிவிக்கப்படுகின்ற பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிய நானும் கலந்து கொள்வோம் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சருக்கு சொந்த மாநில காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை என்பது கவலைக்குரிய விஷயம்தான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications