Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனவர் மீதான தாக்குதலை தட்டிக் கேட்கத் தவறிய மத்திய, மாநில அரசுகள்-ஜெ. தாக்கு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தட்டிக் கேட்காத மத்திய, மாநல அரசுகளின் போக்கால், மீனவர்கள் தினசரி செத்து செத்துப் பிழைக்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...

அந்நிய செலாவணியை ஈட்டுவதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கக் கூடிய மீன்பிடித் தொழில் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வந்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டு காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அன்றாடம் துன்புறுத்தி வருகின்றனர்.

தற்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினம், தினம் செத்து பிழைக்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைமைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்தச் சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில், நாகப்பட்டினம் மாவட்டம், வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் உயிரிழந்தார். பல மீனவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் இந்தக் கொடூர சம்பவத்திற்குப்பிறகு, ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கைக் கடற்படை மீண்டும் நடுக்கடலில் தாக்கி, அவர்கள் வசம் இருந்த மீன்களையும், மீன்பிடிச் சாதனங்களையும் பிடுங்கிக்கொண்டு அவர்களை விரட்டி அடித்துள்ளது. இலங்கை கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாகி விட்டது. மீனவர் கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

எனவே, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி, அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை விளைவிக்கும் இலங்கை அரசை தட்டிக் கேட்காத மத்திய அரசைக் கண்டித்தும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+