கைதான இருவரும் 500 பேருக்கு போலி மார்க் ஷீட்களை விநியோகித்துள்ளனர்-போலீஸ்
சென்னை: போலி மதிப்பெண் பட்டியலை விநியோகித்து கைதாகியுள்ள ஏகாம்பரம் மற்றும் திருவேங்கடம் ஆகிய இருவரும் இந்த ஆண்டு மட்டும் 500 பேருக்கு போலியான மதிப்பெண் பட்டியலை விநியோகித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிளஸ்டூ மாணவர்களுக்கு போலி மதிப்பெண் பட்டியலை விற்றதாக சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் ரெக்கார்ட் கிளார்க்காக பணியாற்றி வரும் ஏகாம்பரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய திருவேங்கடம் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இருவரும் கடந்த 8 வருடங்களாக போலி சான்றிதழ்களை வழங்கி வந்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ. 10,000 வரை பணம் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் 500 பேருக்கு இவர்கள் போலி சான்றிதழ்களை விற்றுள்ளனர். அதில் 51 பேர் மட்டுமே தற்போது சிக்கியுள்ளனர். மற்றவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விரைவில் அவர்களிடமிருந்து சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications