சாத்தான்குளத்தில் கிறிஸ்தவ ஆலயம் தீ வைத்து எரிப்பு
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கிறிஸ்தவ ஆலயத்திற்கு விஷமிகள் தீ வைத்ததால் ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சாத்தான்குளம் அருகே உள்ளது சொக்கன்குடியிருப்பு. இங்கு பிரசித்த பெற்ற தனிஸ்லாஸ் கிறி்ஸ்தவ ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஊர்நலக்கமிட்டியினர் திருவிழா நடத்தி வந்தனர்.
இந்த ஆண்டு முதல் திருவிழாவை ஆலய கமிட்டி சார்பில் நடத்த முடிவு செய்தனர். இதில் பிரச்சனை ஏற்பட்டதால் விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. இருதரப்பை கொண்ட குழு அமைத்து திருவிழா நடத்தலாம் என கோர்ட் தீர்ப்பு அளித்தது.
இதை தொடர்ந்து பங்கு தந்தை ஜ்ஸ்டின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. திருவிழா விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த குழு அமைத்தது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆலயத்தின் பின்பகுதியில் உள்ள அறையில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்தவர்கள் கோயில் மணியை அடித்து பொதுமக்களை எழுப்பினர். ஊரே அங்கு திரண்டு வந்தது.
சாத்தான்குளம் தீயணைப்பு நிலையம் மற்றும் தட்டார்மடம் போலீஸ் ஆகியவற்றிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி மாரியப்பன் தலைமையில் வீரர்கள் வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அறையில் இருந்த ஜெனரேட்டர், மற்றும் தேக்கு மரம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகிவி்ட்டன. சேதமதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications