சென்னை டூ மதுரை-வைகோ, அழகிரி, எஸ்.எஸ்.சந்திரன் ஒரே விமானத்தில் பயணம்
மதுரை: சென்னையில் இருந்து மதுரைக்கு பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானத்தில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வும் பயணித்தனர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் சென்றனர்.
மூன்று முக்கிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒரே விமானத்தில் பயணித்ததால் விமான நிலையத்தில் அவர்களது ஆதரவாளர்களிடையே பரபரப்பு காணப்பட்டது.
விமானம் மதுரையை அடைந்ததும், முதலில் மு.க.அழகிரி வெளியேறினார். பின்னர் வைகோ கிளம்பினார். கடைசியாக எஸ்.எஸ்.சந்திரன் இறங்கிச் சென்றார்.
வழக்கமாக எதிர்பாராதவிதமாக எதிரெதிராக எதிர் துருவத்தில் இருக்கும் தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வது வழக்கம். ஆனால் நேற்றைய பயணத்தின்போது வைகோவும், அழகிரியும் அப்படி செய்யவில்லையாம்.
இதில் விசேஷம் என்னவென்றால் வைகோவும், எஸ்.எஸ்.சந்திரனும் ஒரு காலத்தில் தீவிர திமுகவினர். பின்னர் வைகோ பிரிந்தபோது எஸ்.எஸ்.சந்திரன், மதிமுகவில் இணைந்தார். சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு முதல் முறையாக நடந்த தேர்தலின்போது மதிமுக சார்பில் போட்டியிட்டவர் சந்திரன். ஆனால் பின்னர் மதிமுகவிலிருந்து விலகிய அவர் அதிமுகவில் ஐக்கியமானார் என்பது சுவாரஸ்யமானது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications