சந்தசிரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம்

மகாராஷ்டிர மாநிலம் பாப்லி அணையிலிருந்து கோதாவரி ஆற்றில் பெருமளவு தண்ணிரை மகாராஷ்டிர அரசு எடுப்பதாக ஆந்திரா குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், பாப்லி அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப் போவதாக நாயுடுஅறிவித்தார்.
பின்னர் தனது கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட 74 பேருடன் கடந்த வெள்ளிக் கிழமையன்று பஸ் யாத்திரை ஒன்றை தொடங்கினார். ஆனால் நான்டெட் மாவட்டத்தில் வைத்து அவரை மகாராஷ்டிர போலீஸார் கைது செய்தனர். ஆனால் சிறைக்குப் போக மாட்டோம் என நாயுடு உள்ளிட்டோர் தர்ணாவில் குதித்ததால் அவர்களை தர்மாபாத்தில் உள்ள ஐடிஐக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.
இந்த நிலையில் வருகிற 26ம் தேதி நாயுடு உள்ளிட்டோரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நாயுடு உள்ளிட்டோரை சிறைக்கு மாற்ற மகாராஷ்டிர போலீஸார் முடிவு செய்தனர்.
இன்று காலை நாயுடு உள்ளிட்டோர் வைக்கப்பட்டிருந்த ஐடிஐக்கு அவர்கள் வந்தனர். அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்லவிருப்பதாக கூறினர். ஆனால் நாயுடு உள்ளிட்டோர் வர மறுத்து மகாராஷ்டிர போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர்.
நாயுடுவையும் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இந்த தடியடியில் பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேர தடியடிக்குப் பின்னர் அவர்களை குண்டுக் கட்டாக தூக்கி வேனில் போட்டு கொண்டு சென்றனர்.
நாயுடுவை அவுரங்காபாத்தில் உள்ள சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மற்றவர்களையும் பல்வேறு சிறைகளில் பிரித்து அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பெரும் பதட்டம்
நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது மகாராஷ்டிர போலீஸார் தடியடி நடத்தியதால் ஆந்திராவில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பதட்டம் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான தெலுங்கு தேசம் கட்சியினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடிக்கும் அபாயமும் நிலவுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications