குமரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி: காய்ச்சல் பரவும் அபாயம்
மார்த்தாண்டம்: டெங்கு காய்ச்சலுக்கு குமரி மாவட்ட எல்லையோர கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பலியாகி உள்ளார்.
பன்றிக் காய்ச்சலைப் போல கேரளாவில் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் பரவாமல் தடுக்க கேரளா சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை அமைப்புகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் கேரளாவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தினசரியும், வாரத்திற்கு ஒரு முறையும் வீட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனால் குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாம் என்று அஞ்சப்படுகிறது.
குமரி மாவட்ட எல்லையோர கிராமமான நெட்டாவை சேர்ந்தவர் ஜிசாமோள் சந்திரா. இவர் மார்த்தாண்டம் தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. டூரிசம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விளையாட்டில் சிறந்து விளங்கிய இவர் பல பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இவர் கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications