கும்பாவுருட்டி பாலியல் பலாத்கார வழக்கில் 3 சுற்றுலா கைடுகள் கைது

செங்கோட்டை அருகே தமிழக எல்லை பகுதியை தாண்டி அச்சன்கோவி்ல் வனப்பகுதியி்ல் கும்பாவுருட்டி அருவிக்கு சுற்றுலா சென்ற தாய், மகள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், சிலதினங்களுக்கு முன் மீண்டும் தமிழகத்தில் இருந்து கும்பாவூருட்டி அருவிக்கு சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தினருக்கு கேரள வனக்குழுவினரும், காவலர்களும் பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை உளவுப்பிரிவு விசாரிக்க கேரள வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், கும்பாவுருட்டி மணலார் சுற்றுலா மைய வனத்துறை கைடுகளான அச்சன்கோவிலை சேர்ந்த மணிகண்டன், அப்துல் ரகுமான், உன்னிகிருஷ்ணன் ஆகியோர் தமிழக பெண்களை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்து வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டார். நேற்று அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து குளத்துபுழா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட அவர்களை நேற்று மாலை 5 மணிக்கு அச்சன்கோவி்ல் மணலாறு, கும்பாவுருட்டி அருவி பகுதிக்கு குளத்துபுழா இன்ஸ்பெக்டர் சந்தோஷ், தலைமையி்ல் போலீசார் அழைத்து சென்று தமிழ் பெண்களை பலத்காரம் செய்த இடங்களை நேரில் காட்டச் செய்தனர். அதன் பின்னர் செங்கோட்டை வழியாக அவர்களை போலீசார் கேரளாவுக்கு அழைத்து சென்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications