சட்டசபை தேர்தலில் லேப்டாப்-வெப்காம்: வைத்திருப்போர் விவரம் சேகரிப்பு
நெல்லை: சட்டசபைத் தேர்தலில் லேப்டாப்புடன் கூடிய வெப் காம்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து இவற்றை வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள் குறித்த விவரத்தை சேகரித்து வரும் தேர்தல் ஆணையம், மாணவர்களை இதில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. இதனால் தேர்தலுக்கான ஆயத்தபணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை 6-ம் தேதி சென்னையில் இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர் இடைத்தேர்தல் வாக்குபதிவு முழுவதும் லேப்டாப்பி்ல் பொருத்தப்பட்ட வெப் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டது. இந்த முறையை வரும் சட்டசபை தேர்தலிலும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் கள்ள ஓட்டு போடுதல், வாக்கு சாவடியை கைப்பற்றுதல் உள்ளிட்ட சம்பவங்களை 100 சதவீதம் தவிர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் நம்புகிறது. அதே நேரம் 234 தொகுதிகளிலும் லேப்டாப்புடன் வெப்கேமராவை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடமோ, அரசிடமோ, அரசு சார்ந்த நிறுவனங்களிடமோ போதிய லேப்டாப்கள் இல்லை.
எனவே பொறியியல் கல்லூரி மாணவர்களை வருகிற சட்டசபை தேர்தலில் முதன்முறையாக ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் லேப்டாப்கள் வைத்துள்ள மாணவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications