உமாசங்கர் ஐ.ஏ.எஸ். திடீர் சஸ்பெண்ட்!
சென்னை: தமிழக சிறுசேமிப்புத் துறை ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்கப்பட்டது. இதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக உமாசங்கர் நியமிக்கப்பட்டார்.
பின்னர் அந்தப் பணியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு சிறுசேமிப்புத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் உமாசங்கர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை பரிந்துரை செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் உமாசங்கர். அவர் தாக்கல் செய்த மனுவில்,
அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநராக இருந்த போது, சுமங்கலி கேபிள் டி.வியை தேசியமயமாக்கவும், மத்திய அமைச்சர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ஊழல் தடுப்பு டி.எஸ்.பியிடம் சொத்து விவரங்களை அளிக்காததன் மூலம் உமாசங்கர் விதிகளை மீறியுள்ளார். இதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அவருக்கு எதிரான புகாருக்கு முதற்கட்ட ஆதாரம் இருப்பதாகவும், ஊழல் தடுப்பு போலீஸ் விசாரணையில் இருந்து அவர் பாதுகாப்பு கோர முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில், உமாசங்கர் நேற்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஊழல் தடுப்பு போலீஸ் விசாரணையில் இருப்பதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, சுற்றுலாத் துறை மேலாண் இயக்குநராக இருந்த மோகன்தாஸ், சிறுசேமிப்புத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications