Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை கடத்தல் கும்பலை கைது செய்யக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: குழந்தை கடத்தல் கும்பலை பிடிப்பதில் ஆர்வம் காட்டாத, அடிக்கடி வீடுகள் தீப்பற்றி எரிவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்காத, நின்று கொண்டிருக்கின்ற ஆடு- மாடுகள் தீப்பிடித்து எரிகின்ற காரணத்தை கண்டுபிடிக்காத, ரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த குற்றவாளிகளை கண்டுபிடிக்காத திமுக அரசைக் கண்டித்து விழுப்புரத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தை கடத்தல் தற்போது தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. குழந்தை கடத்தியதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை காவல் துறை கைது செய்து விசாரித்த போது, இதன் பின்னால் ஒரு பெரிய கடத்தல் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருப்பதும், குறிப்பாக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பிறந்த குழந்தைகள் அதிக அளவில் கடத்தி விற்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பான விசாரணை முடிவுறாத சூழ்நிலையில், கடத்தல் கும்பல் குழந்தைகளை வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டிற்கு விற்றிருக்கலாம் என்று காவல்துறை கூறியுள்ள சூழ்நிலையில், குழந்தைகள் வெளி மாநிலத்திற்கும், வெளி நாட்டிற்கும் கடத்தப்படவில்லை என்று ஒரு காவல் துறை உயர் அதிகாரி அண்மையில் பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

காவல் துறை உயர் அதிகாரியின் இது போன்ற பேட்டி இந்தக் கடத்தல் சம்பவத்தை மூடி மறைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்தப் பேட்டிக்குப் பிறகு, 2008ம் ஆண்டு கடத்தப்பட்ட ஒரு ஆண் குழந்தையை காவல் துறை பெங்களூரிலிருந்து மீட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை கடத்தல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி, மயிலம் ஒன்றியத்தில் உள்ள நெடிமோழியனூர் கிராமத்தில் கடந்த நான்கு மாத காலமாக வீடுகள் திடீர் திடீர் என்று தீப்பற்றி எரிந்து வருகின்றன. நின்று கொண்டிருக்கின்ற ஆடு, மாடுகள் தீப்பிடித்து எரிகின்றன. இதே போன்ற சம்பவம் வல்லம் ஒன்றியம், கட்டாஞ்சிமேடு கிராமத்திலும் நடந்திருக்கிறது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

மேற்படி கிராம மக்களின் அச்சத்தைப் போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் மைனாரிட்டி திமுக அரசு இதுவரை எடுக்கவில்லை.

இதே போன்று, திண்டிவனத்தை அடுத்த மயிலம் ஒன்றியம், சித்தணி கிராமத்தில் ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தொடர்பு இருக்கிறது என்று முதலில் சொல்லப்பட்டது. பின்னர் தமிழ் தீவிரவாத அமைப்பு இந்தச் செயலை செய்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது. கடைசியாக நக்சலைட்டுகள் இதைச் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

எனவே, குழந்தை கடத்தல் கும்பலை பிடிப்பதில் ஆர்வம் காட்டாத, அடிக்கடி வீடுகள் தீப்பற்றி எரிவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்காத, ரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த குற்றவாளிகளை கண்டுபிடிக்காத, திமுக அரசைக் கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

தினபூமி ஆசிரியர் கைதுக்கு கண்டனம்:

அதே போல அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குவது பத்திரிகைத் துறை. நாட்டில் நடைபெறும் அக்கிரமங்களையும், அநியாயங்களையும், ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் உன்னதமான கடமையை பத்திரிகைகள் செய்து வருகின்றன.

அரசு விதிமுறைகளை மீறி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் கடத்தப்படுவது குறித்து 'தினபூமி" நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்தச் செய்தியை வெளியிட்டதற்காக நாளிதழின் ஆசிரியர் மணிமாறன், அவரது மகன் எம். ரமேஷ்குமார் மற்றும் எம். முத்தையா ஆகியோர், காவல் துறையினரால் விடியற்காலையில் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பத்திரிகையாளர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கருணாநிதி ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தை நினைக்கும்போது 'பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்ற" பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

ஏற்கெனவே தமிழ்நாட்டின் கனிம வளமான மணல் திமுகவினரால் தமிழகம் எங்கும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. கிரானைட் கற்கள் கடத்தப்படுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இது போன்ற கைது நடவடிக்கையை திமுக அரசு எடுத்ததும், மேலும் புதுப்புது வழக்குகளை அவர்கள் மீது காவல் துறை தொடுக்க நினைப்பதும் அடக்குமுறையின் உச்சகட்டம்.

ஜனநாயகத்திற்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் எதிரான திமுக அரசின் இந்தச் செயலுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+