ஈ ஆடும் என்ஜினீயரிங் கல்லூரிகள்: 15 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை

என்ஜினீயரிங் படிப்பிற்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து முடிந்தது. இதில் 55 ஆயிரத்து 164 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இந் நிலையில் 15 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. மேலும், 88 கல்லூரிகளில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.
தமிழகத்தில் சுமார் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சிவில், மெக்கானிக்கல் போன்று 47 பாடப் பிரிவுகள் உள்ளன. அதில் எலக்ட்ரானிக் கம்யுனிகேசன் பிரிவை 13,668 மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மெக்கானிக்கல் பிரிவை 9,853 பேர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 8,795 பேர்களும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவை 6,794 பேர்களும் தேர்ந்தெஎடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப பிரிவை 5,113 பேர்களும், சிவில் பிரிவை 4,381 பேர்களும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏரோனாட்டிக்கல் பிரிவை 958 பேர்களும், பயோ டெக்னாலஜி பிரிவை 637 பேர்களும், ஆட்டோமொபைல் பிரிவை 428 பேர்களும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தமிழ் வழி என்ஜினீயரிங் படிப்பில், சிவில் பிரிவில் 235 பேர்களும், மெக்கானிக்கல் பிரிவில் 204 பேர்களும் சேர்ந்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி 15 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. மேலும், 88 கல்லூரிகளில் 5 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.
இதற்கான காரணம் குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போதுள்ள மாணவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். கட்டமைப்பு வசதிக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். சில மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரித்த பிறகே கல்லூரியை தேர்ந்தெடுக்கின்றனர். பிடித்த பாடத்தை விட நல்ல கல்லூரிகளில் சேர்வதைத் தான் விரும்புகின்றனர். சில மாணவர்கள் மட்டுமே எந்த கல்லூரியாக இருந்தாலும் சரி பிடித்த பிரிவு கிடைத்தால் போதும் என்று நினைக்கின்றனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications