புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக யாழ்ப்பாணத்தில் இந்தியன் வங்கி கிளை

கடந்த சனிக்கிழமையன்று, வங்கியின் முதல் காலாண்டு செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது கூறுகையில்,
இந்தியன் வங்கியின் கிளை இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்களின் நலனுக்காக யாழ்ப்பாணத்தில் இன்னும் ஒரு கிளையைத் தொடங்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கொழும்பு கிளையில் நடக்கும் மொத்த வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 800 கோடி ஆகும். இதில் ரூ. 300 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அன்மையில் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லிக்கு வந்திருந்தபோது யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய கிளை தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தை அடுத்து கண்டியில் மேலும் ஒரு கிளையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதே போன்று இந்தோனேசியாவில் இன்னும் ஒரு பிரதிநிதி அலுவலகத்தை தொடங்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம்.
தற்போது இந்தியன் வங்கியில் 19 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 600 பேர் நடப்பு ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். எனவே, ஓய்வு பெறுபவர்களுக்கு பதிலாக 1,000 பேரை தேர்வு செய்ய உள்ளோம்.
நடப்பு நிதி ஆண்டில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் வங்கியின் லாபம் கடந்த ஆண்டை விட 11 சதவிகிதம் அதிகரித்து ரூ. 368.15 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு முதல் காலாண்டின் லாபம் ரூ. 331.66 கோடி. வங்கியின் வருமானமும் 11 சதவிகிதம் உயர்ந்து ரூ. 2,477.25 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வருமானம் ரூ. 2,230.39 கோடியாக இருந்தது. தற்போது இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2.10 கோடி என்று அவர் கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications