வயர் அறுந்தது: சென்னை வேளச்சேரி-கடற்கரை பறக்கும் ரயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: மின்சார வயர் அறுந்ததால் சென்னையில் பறக்கும் ரயில் போக்குவரத்து முடங்கியது.
சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இரு மார்க்கத்திலும் அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
இந் நிலையில் இன்று காலை 8 மணியளவில் வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயில் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது மின் கம்பி அறுந்து விழுந்தது. இதையடுத்து அந்த ரயில் வழியில் நிறுத்தப்பட்டது.
இதனால் 2 மணி நேரம் பறக்கும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.
அறுந்து கிடந்த வயர் சரி செய்யப்பட்டு 10 மணிளவில் போக்குவரத்து சீரானது.
ரயில்வே காண்டிராக்ட்-சோனியா செயலாளர் பெயரில் மோசடி:
இந் நிலையில் ரயில்வே காண்ட்ராக்ட்டைப் பெற சோனியா காந்தியின் செயலாளர் அகமத் படேலின் பெயரை மோசடியாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்த முன்னிலால் ஜெயின் (36) நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் பார்சல்களை ஏற்றி-இறக்க காண்டிராக்ட் எடுத்திருந்தார். அதற்காக 2 நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இந்த 3 வருட காண்டிராக்ட் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் அந்த காண்டிராக்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் செயலாளர் அகமதுபடேல் பெயரில் அவரது லெட்டர் பேடில் போலியாக ஆவணம் தயாரித்து தென்னக ரயில்வேயில் சமர்பித்தார்.
ஆவணத்தை ரயில்வே வர்த்தகப் பிரிவு துணை ஆணையர் வீரநாராயணன் ஆய்வு செய்தபோது அது போலி என்று தெரியவந்தது. இதையடுத்து ஜெயின் மீது பூக்கடை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து ஜெயின் தலைமறைகிவிட்டார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications