தமிழகத்துக்கு சீனாவால் ஆபத்து: வைகோ எச்சரிக்கை

முன்னாள் எம்பி டாக்டர் ஏ.என். கலாநிதி எழுதிய 'சீனப் பெருஞ்சுவர்' என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது நூலை வெளியிட்டு வைகோ பேசுகையி்ல்,
தென்னகத்தில் தான் கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளும், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளமும், தும்பா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்களும், ஆவடி உள்ளிட்ட பாதுகாப்பு கேந்திரங்களும் உள்ளன.
இலங்கையில் தமிழர்களை அழிக்க ராஜபக்சே அரசுக்கு சீனா ஆயுத உதவி செய்தது. இதன்மூலம் இந்தப் பகுதியில் சீனா காலூன்ற முயற்சிக்கிறது.
இதனால், தமிழகம் உள்பட தென்னகத்துக்கு சீனாவால் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை தாக்குதலுக்கு ஆளாகாத தமிழகமும் வருங்காலத்தில் தாக்கப்படும் அபாயம் உள்ளது.
சீனத்தை பகை நாடாக இந்தியா கருதியதே இல்லை. அந்த நாட்டுடன் நட்புறவு பாராட்டவே, நேரு விரும்பினார். ஆனால், சீனாதான் நம் மீது படையெடுத்து இந்திய மக்களின் மனங்களை தவிக்க வைத்தது.
அப்போது சிறையில் இருந்த அண்ணா, நேருவின் வேண்டுகோளை ஏற்று பிரிவினை கோரிக்கையை கைவிட்டார். நாடோடி மன்னன் படத்தின் 100வது நாள் விழாவில் தனக்கு அளிக்கப்பட்ட தங்க வாளை, நிவாரண நிதிக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர்.
ஆனால், சோனியா காந்திக்கு இந்தப் பிரச்சனை குறித்து சரியான அணுகுமுறை இல்லை. ஒருவர் சொல்வதை அப்படியே வழிமொழிவது சிந்தனையாளர் செய்யும் செயல் அல்ல என்றார் வைகோ.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications