இலங்கைக்கு வெளியுறவுத்துறை உயர் அதிகாரி செல்வார்-பிரதமர் தகவல்

இலங்கையில் தமிழர் மறு குடியேற்ற நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியேறமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே உண்மை நிலவரத்தை ஆராய்வதற்காக சிறப்புத் தூதரை அங்கு அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பிரதமர் பதில் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் உயர் அதிகாரி ஒருவர் அங்கு செல்லவுள்ளதாக பிரதமரிடமிருந்து மீண்டும் முதல்வருக்குக் கடிதம் வந்துள்ளது.
அக்கடிதத்தில், கடந்த 17ம் தேதி தாங்கள் கடிதம் எழுதியதற்கு நன்றி. அதில் இலங்கையில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாண பகுதி மக்களின் மறுவாழ்வு மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். அதை பரிசீலித்தோம்.
மேலும் நீங்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் காட்டி வரும் அக்கறை மற்றும் முக்கியத்துவத்தால் நாங்கள் தீவிர கவனம் செலுத்துகிறோம். இதன்படி, வெளிவிவகாரத்துறையின் மூத்த அதிகாரியை விரைவில் இலங்கைக்கு அனுப்ப உள்ளோம்.
அவர், அங்குள்ள இந்திய தூதரக அதிகாரியுடன், தமிழர் நிலை குறித்தும், அவர்களை மறுகுடியமர்த்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பேசுவார். வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications