பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் கொலை: பீகார் பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரை அடித்து கொன்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பீகார் மாநிலம் பட்னா அருகே உள்ள மக்காமை சேர்ந்தவர் அர்பி என்ற சுமன். இவரது மனைவி லலிதா. இவர் கோவில்பட்டியில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

கடந்த 10-9-2009 அன்று இரவு கோவில்பட்டி ரயி்ல் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த லலிதாவை 60 வயது மதிக்கத்தக்க மற்றொரு பிச்சைக்காரர் பலாத்காரம் செய்ய முயன்றார். ஆத்திரமடைந்த லலிதா அவரை தடியால் தாக்கினார். இதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது தொடர்பாக ரயில் நிலைய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி போலீசார் லலிதாவை கைது செய்தனர். தூத்துக்குடி முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி மேரி அன்சலம் வழக்கை விசாரித்து லலிதாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+