சென்னை சிறுவன் படுகொலை-பூவரசியின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: சென்னை சிறுவன் ஆதித்யா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளம் பெண் பூவரசியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்காதலில் தோல்வி அடைந்ததால், அதிருப்தி அடைந்த இளம் பெண் பூவரசி, தனது கள்ளக்காதலர் ஜெயக்குமாரின் ஒன்றரை வயதுக் குழந்தை ஆதித்யாவை கொலை செய்து பிணத்தை சூட்கேஸில் அடைத்து புதுச்சேரிக்கு கொண்டு சென்று அங்கு பஸ்சில் போட்டு விட்டு வந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில், பூவரசி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவுடன் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் அவர் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அங்கு மனு தள்ளுபடியாகி விட்டது. இதையடுத்து சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் பூவரசி.
அந்த மனு நேற்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பூவரசி சார்பில் ஆஜரான வக்கீல் கிருஷ்ணமூர்த்தி வாதாடும்போது, பூவரசி மீது தேவை இல்லாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்வதாக கூறினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு விசாரணையை தள்ளி வைத்தார். இன்றைக்குள் அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அரசுத் தரப்பி்ல இன்று வாதிடுகையில், இன்னும் விசாரணை முடியவில்லை. எனவே பூவரசிக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி பூவரசியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications