லட்சக்கணக்கான லிட்டர் பாலைக் கொட்டி சிவசேனா போராட்டம்

லட்சக்ணக்கான குழந்தைகள் சரியாக பால் கூடக் கிடைக்காமல் தவிக்கும் நாடு இது. ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் எத்தனையோ குழந்தைகள் இறக்கின்றன. ஆனால் லட்சக்கணக்கான லிட்டர் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தை நடத்தியுள்ளது சிவசேனா.
பதப்படுத்தப்பட்ட பால் பவுடரை இறக்குமதி செய்ய அனுமதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அப்படிச் செய்தால் உள்ளூர் பால் பண்ணைத் தொழில் பாதிக்கப்படும் என்று அது கூறுகிறது.
இந்த நிலையில் தற்போது பாலைக் கொட்டி போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளது சிவசேனா.
2 நாட்களுக்கு முன்பு சதாராவில் ஐந்து பால் லாரிகளை தடுத்து நிறுத்திய சிசவேனா தொண்டர்கள் அதில் இருந்த 50,000 லிட்டர் பாலை சாலையில் கொட்டிக் கவிழ்த்தனர்.
நேற்று சதாரா பிரிவு சிவசேனாவினர் பால் லாரிகளை மீண்டும் தடுத்து நிறுத்தி பல லட்சம் லிட்டர் பாலை தரையில் கொட்டி வீணாக்கினர்.
பல லட்சம் லிட்டர் பாலை இப்படி சாலைகளில் கொட்டி வீணாக்கி வரும் சிவசேனாவின் போராட்டம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications