ரத்தனுக்குப் பின் டாடா குழும தலைவராகும் நோயல்!
மும்பை: ரத்தன் டாடா ஓய்வு பெற்ற பின் டாடா குழுமத்தின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
53 வயதான இவர் ரத்தன் டாடாவின் சித்தப்பா மகன் ஆவார். ரத்தன் டாடா திருமணமாகதவர் ஆவார். இவர் 2012ம் ஆண்டில் ஓய்வு பெற உள்ளதையடுத்து தனது வாரிசாக நோயலை தேர்வு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் டாடா குழுமத்தின் சர்வதேச வர்த்தகத்தை கவனிக்கும் டாடா இன்டர்நேசனல் தலைவராக நோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் இவர் டாடா நிறுவனத்தின் டிரன்ட் வர்த்தகப் பிரிவை கவனித்து வந்தார். முன்னதாக வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட்ஸ் கார்ப்பரேசன், டைடன் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய டாடா குழுமங்களையும் நிர்வகித்துள்ளார்.
டாடா நிறுவனத்தை கட்டுப்படுத்தும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18 சதவீத பங்குகளை வைத்துள்ள பல்லோன்ஜி மிஸ்திரி குடும்பத்தின் மருமகன் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரும் பில்லியனர் என்றாலும் மிக அமைதியான வாழ்கையை விரும்பும் நோயல் டாடாவுக்கு கோட்-சூட்டே பிடிக்காதாம். மிகச் சாராணமான வாழ்க்கையை வாழும் இவர் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டியதும் இல்லை.
ஆரம்பத்தில் ரத்தன் டாடாவும் இப்படித்தான் இருந்தார். அமெரிக்காவில் இருந்த அவரை டாடாவின் நெல்கோ தலைவராக நியமித்து பின்னர் அவரை டாடா குழுமத்தின் தலைவராக்கினார் ஜே.ஆர்.டி.டாடா.
டாடா குழுமத்தில் மொத்தம் 90 நிறுவனங்கள் உள்ளன. இவை 85 நாடுகளில் தொழில் நடத்தி வருகின்றன என்பது குறி்ப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications