ஆகஸ்ட் 1 முதல் தென்மாவட்ட ரயில்கள் நேரம் மாற்றம்
நெல்லை: மதுரை-திருப்பரங்குன்றம் இடையே மேம்பால பணிகள் காரணமாக ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தென்மாவட்ட ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
மதுரை-திருப்பரங்குன்றம் இடையே மேம்பால பணிகள் நடப்பதால் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் எண்-786 விருதுநகர்-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் எண்-787 மதுரை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும்.
நாகர்கோவில்-கோவை பயணிகள் ரயில் எண்-383 விருதுநகர்-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர்-நாகர்கோவில் இடையே வண்டி எண்-384 ஆக மாற்றப்பட்டு அதே நேரத்தில் இயக்கப்படும்.
கோவை-நாகர்கோவில் பயணிகள் ரயில் எண்-384 மதுரை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதுரை-கோவை இடையே வண்டி எண்-383 ஆக மாற்றப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications