தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து!
டெல்லி: தேர்தலுக்குத் தேர்தல் தேய்ந்து வரும் மதிமுகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. அதே போல புதுச்சேரியில் பாமக தனது அங்கீகாரத்தை இழந்துள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில்,
தமிழ்நாட்டில் மதிமுக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆகும். அதற்கு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) ஆணையின்படி, பம்பரம்' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் சின்னங்கள் ஆணையின் 6ஏ மற்றும் 6சி விதிகளின்படியே, ஒரு கட்சியின் அங்கீகாரம் நீடிப்பது முடிவு செய்யப்படுகிறது.
கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர்கள், செல்லத்தக்க மொத்த ஓட்டுகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெறுவதுடன், 2 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது, கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், செல்லத்தக்க மொத்த ஓட்டுகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெறுவதுடன், ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது, சட்டசபை தேர்தலில், மொத்த தொகுதிகளில் 3 சதவீத தொகுதிகளிலோ அல்லது 3 தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி வீதம் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இந்த விதிமுறைப்படி, ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும், ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டுகள், தேர்தல் கமிஷனால் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதன்படி மதிமுக பெற்ற ஓட்டுகள் ஆய்வு செய்யப்பட்டன.
அந்தக் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 3.67 சதவீத ஓட்டுகள் பெற்றதுடன், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. சட்டசபைத் தேர்தலில் 5.98 சதவீத ஓட்டுகள் பெற்றதுடன், 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், அக்கட்சி, தனது அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை.
எனவே, மதிமுகவின் அங்கீகாரத்தை ஏன் வாபஸ் பெறக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் வாய்ப்பளித்தது.
அதற்கு அந்தக் கட்சி எழுத்து மூலம் அளித்த பதிலில், சட்டசபை தேர்தலில் பெற்ற 5.98 சதவீத ஓட்டுகளை 6 சதவீதமாக கணக்கில் கொண்டு, அங்கீகாரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷன் வாய்ப்பளித்தது. அவரும், அக்கட்சி ஏற்கனவே அளித்த வாதங்களை முன்வைத்தார். ஆனால், அவை ஏற்புக்குரியதாக இல்லை.
எனவே, மதிமுகவின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், அக்கட்சி பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சியாக நீடிக்கும். அதற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பம்பரம்' சின்னம், மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
புதுச்சேரியில் பா.ம.க. அங்கீகாரம் ரத்து:
பாமக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி ஆகும். அக்கட்சிக்கு மாம்பழம்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் 34.29 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது. ஆனால், எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
சட்டசபை தேர்தலில் 3.80 சதவீத ஓட்டுகள் பெற்று, 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, புதுச்சேரியில் அக்கட்சி மாநில கட்சியாக நீடிப்பதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை.
எனவே, புதுச்சேரி மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க பாமகவுக்கு வாய்ப்பு தரப்பட்டது. அதன்படி, எழுத்து மூலம் விளக்கம் அளித்தது.
கடந்த 19ம் தேதி, பாமகவைச் சேர்ந்த ஆர்.வேலு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
நாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், இரண்டாம் இடத்தை பெற்றதாகவும், சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் அவர் வாதத்தை எடுத்து வைத்தார்.
புதுச்சேரியில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியே இருப்பதால், ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற தேர்தல் சின்ன ஆணை, அங்கு பொருந்தாது என்றார்.
ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் தேர்தல் சின்ன ஆணை விதிமுறைகளை பாமக பூர்த்தி செய்யவில்லை. ஆகவே, புதுச்சேரியில் பாமகவின் மாநிலக் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், அக்கட்சி மாம்பழம்' சின்னத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் பாமக வழக்கம் போல் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக நீடிக்கும் என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.
லாலுவுக்கும் சரியான அடி:
அதே போல லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் பிகார், ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில், தேசிய கட்சி அங்கீகாரம் பெற்றிருந்தது.
ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிகார், ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் அக்கட்சி மிகக் குறைவான ஓட்டுகள் பெற்று படுதோல்வி அடைந்தது.
எனவே ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேசியக் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் அந்தக் கட்சி பிகார், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக சுருங்கியுள்ளது.
அதே நேரத்தில் அந்தக் கட்சியின் ஹரிக்கேன் விளக்கு சின்னம் நீடிக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும் சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், அருணாசல காங்கிரஸ் ஆகியவற்றின் தேசிய கட்சி அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவை இனி மாநிலக் கட்சிகளே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications