துணி துவைக்கும் அறையில் கணவரை அடைத்து வைத்த பிரெஞ்சுப் பெண் கைது
பாரீஸ்: பாரீஸ் அருகே துணி துவைக்கும் அறையில் தனது 80 வயது கணவரை ஒரு ஆண்டாக அடைத்து வைத்திருந்த 45 வயதுப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இந்த செயலுக்கு அப்பெண்ணின் கள்ளக்காதலரும் உடந்தையாக இருந்துள்ளார்.
பாரீஸ் அருகே உள்ள அர்ரோ என்ற நகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நகரைச் சேர்ந்த 80 வயது முதியவருக்கு 45 வயதில் மனைவி உள்ளார். கணவர் மிகவும் வயதானவராக இருந்ததால் மனைவி அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவருக்கு இன்னொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த வருடம் தனது கணவரை துணி துவைக்கும் அறைக்குள் வைத்துப் பூட்டி விட்டார். சிறையில் கொடுப்பது போல சாப்பாடு மட்டும் கொடுத்து வந்துள்ளார். பின்னர் தனது கள்ளக்காதலருடன் விரும்பிய நேரத்திற்கு உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இந்தப் பெரியவர் குறித்த தகவல் போலீஸாருக்குத் தெரிய வர விரைந்து வந்து அவரை மீட்டனர். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்தப் பெரியவருக்கு கண் சரியாகத் தெரியவில்லை. சரியான சாப்பாடு இல்லாமல் மிகவும் மெலிந்து போய்க் காணப்பட்டார்.உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
அவருக்கு நினைவு நன்றாக இருப்பதாகவும், இருப்பினும் இன்னும் துயரத்திலிருந்து அவர் முழுமையாக மீளாததால், யாருடனும் பேசாமல் மெளனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ப்ரூனோ ஆர்வியஸ்ட் கூறுகையில், ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே இவருக்கு சாப்பாடு கொடுத்துள்ளார் அவரது மனைவி. அதுவும் கூட காலாவதியாகிப் போன ரொட்டிகளையே கொடுத்துள்ளார். இதனால்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
கணவரை சிறை வைத்தது போல அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த அந்த மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications