ஜெ மீதான ரூ. 2 கோடி பரிசு வழக்கு: ஒத்திவைக்க சிபிஐ எதிர்ப்பு

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1992ல் முதல்வராக இருந்த போது பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவருக்கு ரூ.2 கோடிக்கு காசோலை பரிசாக வந்தது. இது எங்கிருந்து வந்தது என்று தனக்குத் தெரியாது என்று கூறிய ஜெயலலிதா அதை தனது சொந்த வங்கிக் கணக்கில் போட்டு பணமாக்கிக் கொண்டார்.
அரசுப் பதவியில் இருப்பவர் தனக்கு வரும் பரிசை சொந்த வங்கிக் கணக்கில் சேர்ப்பது குற்றம் என்று கூறி சிபிஐ அவர் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு உடந்தையாக இருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, செங்கோட்டையன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
சிபிஐ நீதிமன்றத்தி்ல் நடந்து வரும் இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடந்து வருவதால் எங்களது மூத்த வக்கீல் அங்கு செல்ல வேண்டியிருக்கிறது.
எனவே வழக்கு விசாரணையை 2 வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்றார்.
இதற்கு சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே இப்படி அவகாசம் கேட்கிறார்கள். இதை அனுமதிக்கக்கூடாது என்றார்.
இதை கேட்ட நீதிபதி ரவீந்திரன், நீங்கள் கூறியதை பதில் மனுவாக தாக்கல் செய்யுங்கள் என்று சிபிஐ வக்கீலிடம் கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை பிற்பகலிலும் தொடர்ந்து நடக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications