'ஹிந்து பயங்கரவாதம்' என்றே சொல்லே கூடாது: ஆர்எஸ்எஸ்

மராத்திய பத்திரிகை ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில்,
ஹிந்து பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி ஹிந்து மதத்தின் மீது கறையை ஏற்படுத்தியுள்ளனர். இந்தக் கறையைப் போக்க ஹிந்து மதத் தலைவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஹிந்து பயங்கரவாதம் என்ற சொல்லை உருவாக்கி பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தச் சொல்லை உருவாக்கியது யார் என்று சரியாக சொல்ல முடியாது.
எனினும் இந்தச் சொல்லை உருவாக்கிய பெருமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையை சாரும் என்று ஒரு தரப்பினரும், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கையே சாரும் என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.
ஹிந்து மதத்தை இழிவாகப் பேசி முஸ்லீம்களை திருப்திப்படுத்தி வாக்குகளை பெறும் நோக்கில்தான் இப்படியொரு வார்த்தையை உருவாக்கி தொடர்ந்து பிரசாரமும் செய்து வருகின்றனர்.
பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று முன்பு யார் பிரசாரம் செய்து வந்தார்களோ அவர்களே தற்போது பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் தொடர்பிருக்கிறது என்பதை நியாயப்படுத்தி பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
பயங்கரவாதத்துக்கு இஸ்லாம் மதத்துடன் மட்டும் தொடர்பில்லை, பிற மதங்களுடனும் தொடர்புண்டு என்ற ரீதியிலும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
வாக்கு வங்கியை மனதில் வைத்து இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இவர்களால் ஹிந்து மதத்தின் மீது படிந்துள்ள கறையை போக்க ஹிந்து மதத் தலைவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தா போன்ற அமைப்புகள் மீது வன்முறை (குண்டுவெடிப்பு) வழக்குகள் பதிவாகியிருந்தாலும் இன்னும் அவர்களை குற்றவாளிகள் கோர்ட் கூறவில்லையே என்று கூறியுள்ளார் வைத்யா.
தமிழகத்திலும் மாவோயிஸ்டுகள்-ஹிந்து முன்னணி:
இந் நிலையில் தமிழகத்திலும் மாவோயிஸ்டுகள் வளர்ந்து வருவதாக ஹிந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழகத்தில் போலி மருத்துவர், போலி போலீஸார், போலி கல்விச் சான்றிதழ் என போலிகள் அதிகரித்துள்ளன. அரசு இயந்திரம் சரியாக செயல்படாததையே இவை காட்டுகின்றன.
மத்திய அரசு மாவோயிஸ்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அதை அவர் செயலில் காட்ட வேண்டும்.
தமிழகத்திலும் மாவோயிஸ்டுகள் வளர்ந்துவருகின்றனர். கல்லூரி விடுதிகளில் தங்கி மாவோயிஸ்டுகள் செயல்படுவதாகவும், தருமபுரி, கடலூர், வேலூர், கிருஷ்ணகிரி, கொடைக்கானல், பெரியகுளம், திருநெல்வேலி, சத்தியமங்கலம் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாகவும் தகவல் உள்ளது.
1998 குண்டுவெடிப்பு சம்பவத்தின் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு, வளர்ச்சியை நோக்கிச் செல்லும் சூழலில், கோவை மீண்டும் பயங்கரவாதிகளின் பிடியில் தள்ளப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன என்றார் கோபாலன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications