மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு உள்ளது என்று கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தில், மலையாற்றூர் பகுதியில் கல்குவாரி தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி சிரிஜகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதி சிரிஜகன் கூறியதாவது,

அரசியல்வாதிகளும், மாபியா கும்பலும் தான் அரசை பயன்படுத்தி லாபம் அடைந்து வருகின்றனர். அரசை யாராவது பின்னால் இருந்து இயக்குகின்றனரா என்பது குறித்து விளக்க வேண்டும்.

சாதாரண பொது மக்களுக்கும், நீதிபதிகளுக்கும் மட்டும் தான் தற்போது சட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். மாநில காவல்துறையினரால் சட்டப்படி செயல்பட முடியவில்லை.

ராணுவத்தை வரவழைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியும். பணம் இருந்தால், எந்த நீதிமன்ற உத்தரவையும் தாண்டி செயல்பட முடியும் என்ற நிலை தான் தற்போது இருந்து வருகிறது என்று வேதனையுடன் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்த கடும் விமர்சனம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+