சென்னையில் சிலை திருட்டு கும்பலை சேர்ந்த 3 பேர் கைது: ரூ.10 லட்சம் சிலைகள் மீட்பு
சென்னை: சென்னையில் சிலைகளைத் திருடும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புடைய சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை எழும்பூர் ரயில் நிலைய பகுதியில் சிலைகளை திருடும் கும்பலின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஐ.ஜி. ராஜேந்திரன் உத்தரவின்படி சூப்பிரண்டு ராதிகா, துணை சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் சிறப்புப்படை போலீசார் எழும்பூர் ரயில் நிலைய பகுதியில் மாறு வேடத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சிலைகளைத் திருடும் கும்பலைச் சேர்ந்த மருதபாண்டி, ரவிச்சந்திரன் ஆகியோர் சிக்கினர். மருதபாண்டி வத்தலகுண்டை சேர்ந்தவர். ரவிச்சந்திரன் வாடிப்பட்டி அருகே உள்ள ராமேஸ்புரம் தோட்டத்தை சேர்ந்தவர். இவர்களிடமிருந்து 1 அடி உயர அம்மன் சிலையும், 1 1/2 அடி உயர பெருமாள் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சிலைகள் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் திருடப்பட்டதாகவும், மேலும், அவற்றை சென்னைக்கு சென்று விற்று வரும்படி பழனிச்சாமி என்பவர் கொடுத்ததனுப்பியதாகவும் மருதுபாண்டி போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.
இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைத்து ராமகிருஷ்ணன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒன்றரை அடி உயர புத்தர் சிலை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. ராமகிருஷ்ணன் நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர். புத்தர் சிலை நெல்லை மாவட்ட பகுதியில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மருதபாண்டி, ரவிச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலைகளை கொடுத்த பழனிச்சாமியை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் இந்த சிலைகள் எல்லாம் எங்கிருந்து திருடப்பட்டவை என்பது தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட 3 சிலைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications