அண்ணா பிறந்தநாள்-காஞ்சிபுரத்தில் மதிமுக திறந்தவெளி மாநாடு
சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ம் தேதி மதிமுக சார்பில் திறந்தவெளி மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்ணா பிறந்தநாள் விழாவை, ஓங்குபுகழ் உன்னத விழாவாகக் கொண்டாடி வருகின்ற மதிமுக, இந்த ஆண்டு செப்டம்பர் 15ல், அறிஞர் அண்ணா கண் மலர்ந்த காஞ்சிபுரம் திருநகரில், பெருஞ்சிறப்புடன் திறந்தவெளி மாநாடாகக் கொண்டாட இருக்கிறது.
1998ம் ஆண்டு, செப்டம்பர் 15ல், அண்ணா பிறந்தநாள் விழாவை, திராவிட இயக்க வரலாற்றிலேயே, அழியாப்புகழ் பெற்று, தனி முத்திரை பதித்த விழாவாக, தலைநகர் சென்னை மெரீனா கடற்கரையில், மறுமலர்ச்சிப் பேரணியும் நடத்திக் கொண்டாடியது.
அன்றைக்கு இந்திய நாட்டின் தலைமை அமைச்சர், உள்துறை அமைச்சர், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் பங்கு ஏற்ற பெருவிழாவாக நடத்தி, அறிஞர் அண்ணாவின் பெருமையை-புகழை, அனைத்து இந்தியாவுக்கும், அகிலத்துக்கும் உயர்த்திக் காட்டியது.
2008ம் ஆண்டு, அண்ணாவின் நூற்றாண்டு விழா தொடக்கத்தை, மதுரை மாநகரில் மாநாடாக நடத்தி, அதன் நிறைவு விழாவை, 2009 செப்டம்பர் 15ல், திருச்சி மாநகரில் நடத்தியது.
நடப்பு ஆண்டில், அண்ணா பிறந்த காஞ்சியிலேயே திறந்த வெளி மாநாடாக, மதிமுக கொண்டாடும். என்று கூறியுள்ளார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications