வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் கருணாநிதி-ஜெ.
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மின் கட்டண உயர்வு, விலைவாசி மேலும் உயர வழிவகுத்துள்ளது. திமுக அரசின் நடவடிக்கையால் பேருந்து,சரக்குக்கட்டணம் பன் மடங்கு உயர்ந்துள்ளது.
ஆனால், மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார். கருணாநிதியின் இந்த செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது.
இதைக்கண்டித்து தென் சென்னை மாவட்ட அதிமுக சார்பில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மகளிர் அணிச்செயலாளர் எஸ்.கோகுல இந்திரா தலைமையேற்பார். வி.பி.கலைராஜன், ஜி.செந்தமிழன்,சிட்லபாக்கம்,ச.ராசேந்திரன், பதர் சயீத் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications