கார் மீது குண்டுவீச்சு-ஈரான் அதிபர் உயிர் தப்பினார்

இன்று காலை மேற்கு ஈரானி்ல் உள்ள ஹமேதான் நகருக்கு அவர் சென்றார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன.
இந் நிலையில் அகமதிநிஜாத் சென்ற காரை குறி வைத்து ஒரு கிரனைட் குண்டு வீசப்பட்டது. ஆனால், அந்த குண்டு தவறி இன்னொரு கார் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் அந்தக் கார் பலத்த சேதமடைந்தாலும் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குண்டு வெடித்ததையடுத்து அதிபரின் வாகனமும் பிற வாகனங்களும் அங்கிருந்து வேகமாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
இநத சம்பவத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் அவர் நேரடியாக உரையாற்றினார். ஆனால், இந்த குண்டுவெடிப்பு குறித்து அவர் ஏதும் பேசவில்லை.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முன் இன்று காலை சிரிய நாட்டு அதிபர் பஸர் ஆசாத்துடன் அவர் தொலைபேசியில் பேசினார்.
அப்போது லெபனான் நாட்டுக்குள் இஸ்ரேலியப் படைகள் ஊடுருவியதை அவர் கண்டித்ததோடு, இந்த விவகாரத்தில் லெனானில் இஸ்ரேலை எதிர்ததுப் போராடி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு தனது ஆதரவு தொடரும் என்றும் கூறினார்.
தன்னைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சில காலமாகவே அகமதிநிஜாத் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications