இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் வேலைக்கு ஆளெடுப்பு 30 சதவீதம் அதிகரிக்கும்
மும்பை: இந்தியாவில் இந்த ஆண்டு வேலைக்கு ஆளெடுக்கும் நடவடிக்கைகள் 30 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர்துறையில் அதிக அளவில் ஆளெடுப்பு நடவடிக்கைகள் இருக்கும் என உலகளாவிய ஆளெடுப்பு ஆலோசகரான கெல்லி சர்வீஸஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கமல் கரந்த் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவீத ஆளெடுப்பு உயர்வு இருக்கும் என கணித்துள்ளோம். நிறுவனங்களின் விரிவாக்கம் உள்ளிடடவை காரணமாக இந்த உயர்வு காணப்படும். அடுத்த ஆறு மாதங்களில் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும்.
இடை நிலை சீனியர் அளவில் திறமையானவர்கள் கிடைப்பதில் சற்று தேக்க நிலை காணப்படுகிறது. அதேசமயம், வங்கிகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பிரஷர் அளவிலும் கூட கிராக்கி ஏற்படும்.
வங்கிகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளைப் பொறுத்தவரை 40 முதல் 50 சதவீத அளவுக்கு ஆளெடுப்பு நடவடிகைகள் அதிகரிக்கும்.
அமெரிக்காவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பான கோணத்தில் சென்று கொண்டிருப்பதே மீண்டும் ஆளெடுப்பு நடவடிக்கைகள் சூடு பிடிக்க காரணம்.
இதேபோல தொலைத் தொடர்புத்துறை, பொறியியல், ரியல் எஸ்டேட் துறைகளிலும் கூட ஆளெடுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications