கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை

சமீபத்தில், இந்த ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. இருப்பினும் வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு 600 யூனிட் வரை பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின் கட்டணத்தை சாக்காக வைத்து வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆணையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் இருந்து மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளின் மீது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
வீட்டின் உரிமையாளர்கள் அதே வளாகத்தில் கூடுதலாக மின்னிணைப்பு பெற முடிவு செய்கையில் மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் மின்னிணைப்புக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து ஆணையத்தின் 24-6-2003 நாளிட்ட மின் கட்டண ஆணை எண் 1-3-ன்படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். வாடகைதாரர்களின் நலன் கருதியும் வீட்டு உரிமையாளரின் சுமையைக் குறைப்பதற்காகவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆணையைப் பொருட்படுத்தாது சில வீட்டின் உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு மாதங்களுக்கான மின் நுகர்வு 600 யூனிட்டுகளுக்கு மேற்படுகையில் வீட்டு மின் நுகர்வோருக்கான அதிகபட்ச மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.05 மட்டுமே ஆகும்.
எனவே, வீட்டின் உரிமையாளர்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.05-க்கு மேல் மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமான செயலாகும். ஒரு வீட்டின் மொத்த மின் நுகர்வு 600 யூனிட்டுக்கு குறைவாக இருக்குமானால், மின் நுகர்வைப் பொறுத்து யூனிட் ஒன்றுக்கு ரூ.2.20, ரூ.1.50, ரூ.0.80, ரூ.0.75 மட்டுமே சட்டப்படி வசூலிக்க முடியும்.
வாடகைதாரர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்தல், 2003-ம் ஆண்டு மின்சார சட்டத்தின் 142 மற்றும் 146-ம் பிரிவுகளின்படி ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும், 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படத்தக்க குற்றமாகும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் இது குறித்து மின்சார சட்டத்தின் 142-ம் பிரிவின்படி ஆணையத்தின் முன்பு அல்லது மின்சார சட்டத்தின் 146-ம் பிரிவின்படி உரிய குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு புகார் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications