முதல்வர் கற்பிக்கும் நியாயம் பெட்ரோல் மீதான வரிக்குப் பொருந்தாதா?

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியும், வருங்காலங்களில் பெட்ரோலிய கம்பெனிகளே தங்கள் விருப்பம்போல் விலையை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் இந்திய அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சியினரும், அமைப்புகளும் திரும்பப்பெற வலியுறுத்தியும், இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்திய அரசு பெட்ரோலிய கம்பெனிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பே இதற்கு காரணம் என்று கூறியுள்ளது. ஆனால், உண்மையில் இந்த பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சில தனியார் கம்பெனிகள் கொழுத்த லாபம் சம்பாதிக்கவே பயன்படும்,
இந்தியாவிலேயே தி.மு.க. அரசுதான் பெட்ரோலிய பொருட்களின் மீது உயர்ந்தபட்சமாக விற்பனை வரி விதிக்கிறது.
பாமர மக்கள் பயன்படுத்தும் மண்எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.3.10 என்று தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
டெல்லியில் 20 சதவீதமாக இருந்த விற்பனை வரியை, தற்பொழுது 12.5 சதவீதமாக குறைத்துள்ளனர். இதனால் விலை உயர்விற்கு முன்பு விற்ற விலையை விட இப்பொழுது டீசல் விலை இன்னும் குறைந்துள்ளது. ஆந்திர மாநிலமும் தற்போதைய விலை உயர்வால், விலை கூடுதலாக ஆகாமல் பார்த்துக் கொண்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் மின்சார கட்டணம் குறைவு என்று சமாதானம் சொல்கிறார். மின் கட்டண உயர்வுக்கு கற்பிக்கப்படும் நியாயம், பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கப்படும் விற்பனை வரிக்கு மட்டும் பொருந்தாதா?.
பெட்ரோலிய பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களை போல குறைக்க சொன்னால் ஏற்க மறுக்கும் கருணாநிதி அரசை கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின் அடுத்த கட்டமாக நாகப்பட்டினத்தில் 8-8-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் புதிய பேருந்து நிலையம் எதிரில் தே.மு.தி.க. தேர்தல் பணி செயலாளர் க.பாண்டியராஜன் தலைமையில், பெட்ரோலிய பொருட்களின் மீதான விற்பனை வரியை குறைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications