சுதந்திர தினம்-நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்புப் படைகள்

ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் மாநில அரசுகளும், மத்திய அரசும் இறங்கியுள்ளன.
மத்தியஉள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு எச்சரிக்கையை அனுப்பியுள்ளது. அதில், முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்கள்,மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்துப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புடன் பாதுகாப்புப் படையினர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்படும் பகுதிகளுக்கு கூடுதல் படையினரும் அனுப்பப்படவுள்ளனர்.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பிரமாண்டமான வணிக தளங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications