கர்நாடக குரலை எதிரொலிக்கும் கருணாநிதி-உழவர் முன்னணி குற்றச்சாட்டு
சிதம்பரம்: கர்நாடகாவில் அணை நிரம்பினால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும் என கர்நாடக முதலமைச்சர்கள் கூறி வந்தனர். ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதியோ கர்நாடகத்தில் போதிய மழை பெய்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று பேசியுள்ளார். இது கர்நாடகத்தின் குரலை எதிரொலிப்பதாகும் என தமிழக உழவர் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு பேசியதாவது,
கர்நாடகாவில் மழை பெய்து அணை நிரம்பினால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவோம் என்று இது வரை இருந்த கர்நாடக முதலமைச்சர்கள் கூறி வந்தனர்.
ஆனால், அண்மையில் கோவையில் பேசிய முதல்வர் கருணாநிதி கர்நாடகத்தில் போதிய மழை பெய்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இது கர்நாடகத்தின் குரலை எதிரொலிப்பதாகும்.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு செயலில் இருப்பதாக தமிழக உழவர் முன்னணி கடந்த மூன்று ஆண்டுகளாக கூறி வருகின்றது.
இந்த காலத்தில் தமிழக அரசு செய்த கடும் தாமதம் காவிரி பாசனப் பகுதியின் குறுவை சாகுபடியையே அழித்து விட்டது. இதே போக்கு நீடித்தால் உழவர்கள் வேளாண்மையை விட்டு ஒதுங்குவதோடு தமிழகத்தில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வரும் என்று அவர் கூறினார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications