நெல்லையில் புதிய மேம்பாலம், பேருந்து நிலையம்: மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
நெல்லை: நெல்லையில் கட்டப்பட்டுள்ள புதிய பிரமாண்டமான மேம்பாலத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தார். நேற்று அவர் தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிடம், தருவைகுளத்தில் புதிய சமத்துவபுரம், சுனாமி குடியிருப்பு ஆகியவற்றை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நேற்றுமுன்தினம் இரவு நெல்லை வந்த மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் திரளான திமுகவினர் கலந்து கொண்டு வரவேற்றனர். அவர் சங்கர்நகர் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
நேற்று காலை நெல்லை வண்ணார்பேட்டையில் ரூ.15 கோடியே 78 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதையடுத்து அவர் வீரவநல்லூரில் மத்திய மந்திரி நெப்போலியன் கட்டியுள்ள தசை பிடிப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும் ரூ.22 லட்சம் செலவில் கட்டப்பட்ட கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் திட்டபணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அம்பை தாலுகா அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் கட்டவும், பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும், மணிமுத்தாறு நகர பஞ்சாயத்து விக்கிரமசிங்கபுரம் நகரசபை குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் அடிக்கல் நாட்டப்பட்டது.
பின்னர் நேற்று மாலை 4.30 மணிக்கு கடையநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு நிறைவடைந்த பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.
இந்த விழாவில் செங்கோட்டை அரசு மருத்துவமனையிலும், தென்காசி அரசு மருத்துவமனையிலும் புதிய கட்டிடம் மற்றும் விரிவாக்கப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், செங்கோட்டையில் வாஞ்சி நாதன் மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டுகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications