இங்கிலாந்தில் பாக். அதிபர் சர்தாரி மீது ஷூ வீச்சு

பாகிஸ்தானில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி பல லட்சம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்து நிற்கும் நிலையில்அவர்களுக்குரிய நிவாரணப் பணிகளை பாகிஸ்தான் அரசு செய்யாததைக் கண்டித்து இந்த ஷூ வீச்சு நடந்தது.
பாகிஸ்தானில் பெரும் வெள்லம் ஏற்பட்ட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்துள்ளனர். இந்த நிலையில் அங்கு நிவாரணப் பணிகள் சரிவர நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தப் பின்னணியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார் சர்தாரி. இது பாகிஸ்தானில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிர்மிங்காம் வந்த சர்தாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு 3000க்கும் மேற்பட்ட இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர்கள் கூடினர். சர்தாரிக்கு எதிராக கோஷமிட்டனர்.
பாகிஸ்தான் மூழ்கிக் கொண்டிருக்கும்போது சர்தாரிக்கு இங்கிலாந்தில் ஜாலியா என்று ஆவேசமாக கோஷமிட்டனர்.
அப்போது அங்கு சர்தாரி வந்தபோது அவரை நோக்கி ஒருவர் ஷூவை தூக்கி வீசினார். ஆனால் அது அவர் மீது படவில்லை. அருகே போய் வீழ்ந்தது. இதையடுத்து அவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications