இரு சரக்குக் கப்பல்கள் மோதல்-மும்பை கடலில் எண்ணெய்க் கசிவு அபாயம்
மும்பை: மும்பை அருகே 2 சரக்குக்கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்டுள்ள எண்ணைக் கசிவை தடுக்க தீவிர நடவடிக்கைகளில் கடலோரக் காவல் படையினர் இறங்கியுள்ளனர்.
ஜவஹர்லால் நேரு துறைமுகத்திலிருந்து கிளம்பிய எம்எஸ்சி சித்ரா என்ற சரக்குக் கப்பலும், எம்வி கலீஜியா-3 என்ற சரக்குக் கப்பலும் மும்பை துறைமுகத்திலிருந்து 5 கடல் மைல் தொலைவில் மோதிக் கொண்டன.
இதில் சித்ரா கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. அந்தக் கப்பலில் இருந்த 33 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மூழ்கி வரும் சித்ரா கப்பலிலில் 2662 டன் எரிபொருள் உள்ளது. இதுதவிர 283 டன் டீசலும், 88 டன் லூப்ரிகன்ட் எண்ணெயும் உள்ளன.
மூழ்கி வரும் கப்பலில் உள்ள எரிபொருள் கடலில் கலக்க ஆரம்பித்தால் பெரும் பிரச்சினையாகி விடும் என்பதால் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 6 கடலோரக் காவல் படை படகுகளும், ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விரைவில் சித்ரா கப்பல் முழுமையாக கடலில் மூழ்கி விடும். அதற்குள் அதில் உள்ள எரிபொருட்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கப்பலில் இருந்த 200 கன்டெய்னர்கள் கடலில் விழுந்து விட்டன. அவற்றை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 15 டன் லூப்ரிகன்ட் எண்ணெய் கடலில் கொட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications