மாவோயிஸ்ட் ஆதரவுடன் மமதா பானர்ஜி இன்று லால்கரில் பேரணி
கொல்கத்தா: நக்சலைட்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலம் லால்கரில் இன்று மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் பேரணி நடத்துகிறது. இந்தப் பேரணிக்கு மாவோயிஸ்ட் நக்சலைட் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மாவோயிஸ்டுகளுடன் மமதா பானர்ஜி கை கோர்த்து செயல்பட்டு வருவது உறுதியாகியுள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
மமதாவின் லால்கர் பயணத்திற்கும், பேரணிக்கும், கூட்டத்திற்கும் தாங்கள் முழு ஆதரவு தருவதாக மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் கிஷன்ஜி கடந்த வாரம்தான் கூறியிருந்தார்.
மேலும் இந்தப் பேரணியின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎப்பை பயன்படுத்த மேற்கு வங்க அரசுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் இந்தப் பேரணியை திரினமூல் காங்கிரஸ் கட்சியின் பெயரில் நடத்தப் போவதில்லை, சாந்த்ராஸ் பிரோதி மஞ்சா என்ற அமைப்பின் பெயரில் நடத்தப் போவதாக மமதா கூறியுள்ளார். இந்த அமைப்பு பரவலான ஜனநாயகத்திற்கான அமைப்பு என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இந்தப் பேரணியில் மமதா தவிர நக்சலைட் ஆதரவாளர்களான எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, சுவாமி அக்னிவேஷ், மேதா பத்கர் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
லால்கருக்கு மமதா வருவதால் மேற்கு மிதினாப்பூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் சில பகுதிகளில் மமதா கட்சியினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications