பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரம்-10 நாள் நடத்த திமுகவுக்கு கருணாநிதி உத்தரவு
சென்னை: திமுக இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் 10 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரக் கூட்டங்களை நடத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அரசின் சாதனைகளை இதில் விளக்கிப் பேசுமாறும், அரசை விமர்சிப்போருக்கு உரிய புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளிக்குமாறும் அவர் திமுக தலைமைக் கழக பேச்சாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.
திமுக அரசு மீதும், அதன் செயல்பாடுகள் மீதும் தொடர்ந்து அதிமுக மட்டுமல்லாமல், காங்கிரஸ் தரப்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் கடுமையாக விமர்சித்துப் பேசி வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக பேச்சாளர்கள் கூட்டத்தின்போது இந்த உத்தரவை கருணாநிதி பிறப்பித்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில்,
இங்கே உள்ள சொற்பொழிவாளர்கள் எல்லாம் தங்களது சொற்பொழிவால் தமிழக மக்களை தி.மு.க.வுக்கு வலுசேர்க்கிற வகையில் அதிகரிக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது; நானும் மறந்துவிடவில்லை.
சொற்பொழிவாளர்கள் தங்களுடைய சிரமங்களை இங்கே எடுத்துச் சொன்னபோது, ஒரு சிலர் கைதட்டியதை நான் காணத் தவறவில்லை. நிர்வாகிகளைக் குறை சொல்லிப் பேசினால் சொற்பொழிவாளர்களுக்கு மகிழ்ச்சி. சில சொற்பொழிவாளர்களைக் குறிப்பிட்டு பேசினால் நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சி. இந்த நிலை தொடரக் கூடாது.
சொற்பொழிவாளர்களாக இருந்தாலும், நிர்வாகிகளாக இருந்தாலும் அவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, கட்டுப்பாட்டு உணர்ச்சியோடு தி.மு.க.வை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இருசாராரும் ஒருவரையொருவர் மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதோடு, பகைத்துக் கொள்ளாமல் நடந்துகொள்ள வேண்டும்.
செப்டம்பர் மாதத்தில் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா, திமுக தொடக்க விழா இந்த மூன்றும் இணைந்து முப்பெரும் விழா ஒரு வாரத்துக்கு நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்தக் கூட்டங்களில், விழாக்களில் நீங்கள் பங்கேற்க வேண்டும்.
திமுக இளைஞரணி சார்பில் ஆகஸ்ட் 20 முதல் 30-ம் தேதி வரையில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெருமுனைப் பிரசாரம், பொதுக்கூட்டம், மாநாடு என்று எதுவாக இருந்தாலும், எல்லாமே தி.மு.க.வின் கொள்கை வளர்க்கும் பிரசாரம் தான் என்ற நிலையிலே அதில் பேச்சாளர்களும், நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும். சொற்பொழிவாளர்களுக்கான பயிலரங்கம் நீலகிரியில் நடைபெற உள்ளது. இதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications