Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-மிதமிஞ்சிய 'மப்பால்' சிக்கினார் காதலர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காதலியை பலாத்காரம் செய்து ஆபாசப் படம் எடுத்த நபர், மிதமிஞ்சிய போதையின் காரணமாக சிக்கிக் கொண்டார்.

தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகள் அருணா. இவரது மொபைல் போனில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு எண்ணில் இருந்து தொடர்ந்து மிஸ்டு கால் வந்துள்ளது.

இதையடுத்து அந்த எண்ணை அருணா தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய வாலிபர் தான் துபாயில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது நேரில் சந்தித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வாலிபர் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தான் துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவதாகவும் அங்கு நாம் சந்திக்கலாம் எனவும் வாலிபர் கூறியுள்ளார். இதை நம்பிய அருணா திருவனந்தபுரம் சென்றுள்ளார்.

அதற்கு முன் இருவரும் நேரில் பார்த்ததில்லை என்பதால் அந்த வாலிபர் தான் அணிந்துவரும் ஆடையின் நிறத்தை கூறியுள்ளார். அதை வைத்து அருணா அவரை அடையாளம் கண்டு கொண்டார். அன்று இரவு இருவரும் திருவனந்தபுரம் தம்பானூர் லாட்ஜில் தங்கியுள்ளனர்.

அப்போது வாலிபர் அருணாவுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துள்ளார். அந்த வாலிபரும் அதிகளவு மது அருந்தியுள்ளார். போதையில் அருணா மயக்கமானார். பின்னர் அருணாவை பலாத்காரம் செய்த வாலிபர் அவரை நிர்வாணப்படுத்தி படம் எடுத்துள்ளார். மறுநாள் பிற்பகல் ஆகியும் அவர்கள் தங்கியிருந்த அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் தம்பானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்தபோது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என நினைத்த போலீசார் அவர்களை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் போதையில் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது போதையை தெளியவைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் செங்கோட்டை வடகரை பகுதியைச் சேர்ந்த மைதீன் என்பவரின் மகன் அமீன் என தெரிய வந்தது. இருவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்த போலீசார் அமீனை கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+